டிரெண்டிங்

அமித்ஷா கண் முன் பாஜகவினர் மீது தாக்குதல் - திருப்பதியில் நேர்ந்த சம்பவம்

அமித்ஷா கண் முன் பாஜகவினர் மீது தாக்குதல் - திருப்பதியில் நேர்ந்த சம்பவம்

rajakannan

திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. பரப்புரையை முடித்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக இன்று சென்றுள்ளார். அப்போது, அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அமித்ஷாவை பின் தொடர்ந்து சென்ற பாஜக ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விஷயத்தில் பாஜக அரசு துரோகம் செய்து விட்டதாக கூறி ஆந்திராவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் தெலுங்கு தேசம் கட்சி சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை வலியுறுத்தில் பாஜக கூட்டணியில் இருந்தே விலகியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள தெலுங்கு மொழி பேசுபவர்கள் பாஜகவினருக்கு வாக்களிக்க கூடாது என்றே முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி இருந்தார். 

இந்த நிலையில், திருப்பதி வந்த அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, மோடியை திரும்பி போ என்ற கோஷத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியுள்ளனர். பாஜகவினர் மீது தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தெலுங்கு தேசம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.