டிரெண்டிங்

பறவையை விழுங்கும் ராட்சத‌ சிலந்தி - வீடியோ.!

webteam

ராட்சத‌ சிலந்தி ஒன்று பறவையை விழுங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

சிலந்தி என்றும், எட்டுக்கால் பூச்சி என்றும் நாம் அழைக்கும் பூச்சி இனம், வலையை தானே உருவாக்கி அதில் சிக்கும் சின்னஞ்சிறு பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். ஆனால் ஒரு சிலந்தி ஒரு பறவையை உட்கொள்ளும் என்றால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ராட்சத‌ சிலந்தி ஒன்று பறவையை விழுங்கும் அந்த வீடியோ பார்ப்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது

'தி டார்க் சைட் ஆஃப் நேச்சர் என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ 3 லட்சத்திற்கும் அதிகமானோரின் கவனத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய சிலந்தியான இவை டாரண்டுலா இனத்தை சேர்ந்தவை என்றும், தென் அமெரிக்காவிலேயே அதிகம் வாழ்வதாகவும் கூறப்படுகிறது. மரங்களில் வாழும் இத்தகைய கருஞ் சிலந்திகள், பூச்சிகளையும், சிறு பறவைகளையும் வேட்டையாடி வருகின்றன.

அந்த வீடியோ குறித்து பதிவிட்டுள்ள பலரும் சில நேரம் இயற்கை நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. சில நேரம் அச்சமூட்டுகிறது என தெரிவித்துள்ளனர்.