டிரெண்டிங்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?: கங்கை அமரன் விளக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன்?: கங்கை அமரன் விளக்கம்

Rasus

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என இசை அமைப்பாளர் கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார்.

பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மீண்டும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். ஏற்கனவே ஆர்.கே.நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது பாஜக சார்பில் இசை அமைப்பாளர் கங்கை அமரன் தான் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அதனால் இந்த முறையும் அவர் தான் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக கரு.நாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கங்கை அமரன் போட்டியிட மறுத்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தில் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் போட்டியிடாததற்கு வேறு ஏதும் காரணங்கள் இல்லை எனவும் கங்கை அமரன் கூறியுள்ளார். யார் நல்லது செய்வார்கள் என யோசித்து பொதுமக்கள் தங்கள் வாக்கினை அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.