டிரெண்டிங்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுகவுக்கு ஜி.கே.வாசன் கடிதம்

Veeramani

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமையிடம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கடிதம் அளித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு உறுப்பினர்கள், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கொடுத்த கடிதத்தை அளித்துள்ளனர்.

கட்சியின் மாவட்டத் தலைவர்கள் தலைமையிலான தேர்தல் குழு, அதிமுகவின் மாவட்டச் செயலாளர்களுடன் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கலந்து பேசி, தமது வேட்பாளர்களை முடிவு செய்யும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.