தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன்3ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 17வது மக்களவையின் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த தேர்தல் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
நாடு முழுவதும் 543 மக்களைவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 10 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குப்பதிவு மையங்கள் 9 லட்சமாக இருந்தது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கிறார்கள். தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திர பிரதேசம், அருணாச்சல், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறாது. பாதுகாப்பு காரணங்கள் கருதி தேர்தல் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் தேதிகள்
முதல் கட்ட தேர்தல் | ஏப்ரல் 11 | 20 மாநிலங்களில் 91 தொகுதிகள் |
2ம் கட்ட தேர்தல் | ஏப்ரல் 18 | 13 மாநிலங்களில் 97 தொகுதிகள் |
3ம் கட்ட தேர்தல் | ஏப்ரல் 23 | 14 மாநிலங்களில் 115 தொகுதிகள் |
4ம் கட்ட தேர்தல் | ஏப்ரல் 29 | 9 மாநிலங்களில் 71 தொகுதிகள் |
5ம் கட்ட தேர்தல் | மே 6 | 7 மாநிலங்களில் 51 தொகுதிகள் |
6ம் கட்ட தேர்தல் | மே 12 | 7 மாநிலங்களில் 59 தொகுதிகள் |
7ம் கட்ட தேர்தல் | மே 19 | 7 மாநிலங்களில் 59 தொகுதிகள் |
வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் - மக்களவைத் தேர்தல்
தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் | மார்ச் 19 |
வேட்புமனு தாக்குதலுக்கு கடைசி நாள் | மார்ச் 26 |
வேட்புமனு மீதான பரிசீலனை | மார்ச் 27 |
மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் | மார்ச் 29 |
வாக்குப் பதிவு | ஏப்ரல் 18 |
வாக்கு எண்ணிக்கை | மே 23 |
தமிழகம் - இடைத்தேர்தல்:
தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடைபெறாது என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18ம் தேதியே 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் என்ன?
திருப்பரங்குன்றம் : மருத்துவமனையில்சுயநினைவோடு இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சிலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் வழக்கு. பின்னர் ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது
ஒட்டப்பிடாரம் : அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜ், அரசு ஒப்பந்ததாரர் என்பதை மறைத்தாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக சார்பில் வெற்றிபெற்ற சுந்தர்ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி: அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில்பாலாஜியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரவக்குறிச்சி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் :
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
புதிய நடைமுறைகள் விதிமுறைகள்: