டிரெண்டிங்

தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

webteam

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்த விவகாரம் இன்றும் எதிரொலித்ததால் மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

குஜராத் தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கட‌ந்த ஒரு வாரத்துக்கு மேலாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாநிலங்களவை கூடியதும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இந்த விவகாரத்தை எழுப்பியதால் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின் மீண்டும் 27 ஆம் தேதி மாநிலங்களவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மக்களவையிலும் இதே பிரச்னை எதிரொலித்ததால் அங்கும் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. அத்துடன் 2ஜி விவகாரத்தில் மத்திய அரசு மன்னிப்பு கோர வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.