டிரெண்டிங்

#TopNews கொரோனாவுக்கு எம்.பி உயிரிழப்பு முதல் செல்போன் பயன்பாட்டாளருக்கான எச்சரிக்கை வரை.!

#TopNews கொரோனாவுக்கு எம்.பி உயிரிழப்பு முதல் செல்போன் பயன்பாட்டாளருக்கான எச்சரிக்கை வரை.!

webteam

விவசாயிகள் ஒப்பந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம். எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஹர்சிம்ரத் கவுர்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு. விவசாயிகளை சில சக்திகள் குழப்புவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.

காஷ்மீரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 52 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல். புல்வாமா தாக்குதல் போன்ற மற்றொரு சதி திட்டத்தை முறியடித்து ராணுவம்.

சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் இந்தியப் படைகள் ரோந்து செல்வதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்.

ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த கோயம்பேடு உணவு தானிய அங்காடி இன்று திறப்பு. காய்கறி, மலர் விற்பனை 28ஆ‌ம் தேதி முதல் தொடங்குகிறது.

தட்கலில் விவசாய மின் இணைப்பு பெறும் திட்டம் இந்தாண்டும் நீட்டிக்கப்படும். காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் விரும்பினால் தட்கலில் இணைப்பு பெறலாம் என்று மின்வாரியம் அறிவிப்பு.

கொரோனாவால் கர்நாடகாவை சேர்ந்த எம்.பி அசோக் காஸ்தி உயிரிழப்பு. பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்.

ரயில் க‌ட்டணத்துடன் ரயில் நிலை‌ய பயன்பாட்டுக்கும் கட்டணம். ரயில்வே வாரிய தலைவர் தகவல்.

நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று.

செல்போனில் தகவல்களை திருடும் புதிய மென்பொருள் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை.