திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத தருணம் ஆகும். எனவே அதற்கான ஏற்பாடுகளை ஒவொன்றாக பார்த்து பார்த்து செய்வர். அதிலும் ஆடம்பரமான திருமணம் என்றால் அதில் செய்யப்பட்டு இருக்கும் ஏற்பாடுகள் பலரது கவனத்தை கவருவதாக இருக்கும். அப்படி இந்த 2024-ஆம் ஆண்டில் டிரெண்டிங் ஆன சில திருமணத்தை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் நடந்த அம்பானி வீட்டு கல்யாணம் இந்த ஆண்டில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திருமணங்களில் ஒன்று. ஆசியாவின் பணக்கார தொழிலதிபர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர், இவரின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமணம்தான் இணையம் முழுவதும் பேசப்பட்டது. திருமணத்திற்கு சில மாதங்கள் முன்னால் இருந்தே கொண்டாட்டங்கள் குஜராத்தில் தொடங்கி இருந்தது. இதில் பாலிவுட், கோலிவுட் நட்சத்திரங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வருகைப் புரிந்தனர்.
ஆகஸ்ட் மாதத்தில் நடிகை எமி ஜாக்சன் மற்றும் ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் ஆகியோருக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆன எமி ஜாக்சன், அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.
எமி ஜாக்சன் சில வருடங்களுக்கு முன் தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவைவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது.
இதனையடுத்து எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து ஜனவரியில் நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆகஸ்டில் நடந்த இவர்களது திருமணத்திற்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர்கள் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் திருமணம் செப்டம்பரில் சிம்பிளாக நடந்தது. 2021-ல் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்து இருந்தனர். அதற்கு பிறகு இவர்கள் காதலிப்பதாக செய்திகள் வலம் வந்தது. இருவருக்கும் சில மாதங்கள் முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்திய நிலையில் தெலங்கானாவில் பழமையான கோவில் ஒன்றில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்வில் இயக்குனர் மணிரத்தினம், இவர்களது திருமண புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் டிசம்பரில் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. சோபிதா துலிபாலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து இருந்தார். 2017ல் சமந்தா- நாக சைதன்யா திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 2021ல் அவர்கள் விவகாரத்து பெறுவதாக அறிவித்தனர். பின்பு கடந்த ஆகஸ்டில் நடிகர்கள் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அறிவித்தனர். இவர்களது திருமணமும் இந்த ஆண்டில் பேசுபொருளாக சமூக வலைதளங்களில் ஆனது.
அடுத்ததாக நெல்லையில் நடைபெற்ற திருமணம் ஒன்று காண்போரை வாயடைத்து போக வைத்துள்ளது. நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் பேத்தி வைஷ்ணவிற்கும், தொழிலதிபர் ஆர்.எஸ்.முருகனின் மகன் விஜய் ராகுலுக்கும் பிரமாண்ட முறையில் திருமணம் நடந்தது. இதில் மணமக்கள் அணிந்திருந்த மாலை அதிக கவனத்தை பெற்றது. ஏனெனில் பொதுவாக அணியப்படும் பூ மாலையாக இல்லாமல் தங்கத்தால் ஆன மாலையை அணிந்து பல்லக்கில் வந்து இறங்கினர்.
மும்பையில் நடைபெற்ற அம்பானி இல்ல திருமணத்தை மிஞ்சிவிட்டதே என இந்த திருமணமும் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.