டிரெண்டிங்

சிவப்பு நிற காரில் கருப்பு மாஸ்க்குடன் வந்து வாக்களித்த விஜய்

JustinDurai

சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து, நடிகர் விஜய் சிவப்பு நிற காரில் வந்து வாக்களித்தார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சினிமா  பிரபலங்களும் ஓட்டு போட வந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் விஜய், கருப்பு கலர் மாஸ்க் உடன் சிவப்பு நிற காரில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது நடிகர் விஜய் சைக்கிளில் வாக்களிக்க வந்தது சமூக வலைத்தளங்களில் வைரலானதுடன், அதுகுறித்து பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டு வந்தன.