டாட்டூ போட்டுக்கொள்வது அதாவது பச்சைக் குத்திக்கொள்ளும் பழக்கம் பழங்காலம் தொட்டு நடைமுறையில் இருந்து வந்தாலும் காலத்திற்கேற்றார் போன்று ஸ்டுடியோக்களுக்கு சென்று வகை வகையான டிசைன்களில் டாட்டூ போடவும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
அதுபோல தங்களுக்கு என்ன மாதிரியான டிசைன்களில் டாட்டூ வேண்டும் என்றெல்லாம் கஸ்டமர்களே கேட்டு வரைந்துக் கொள்ளும் பழக்கமும் உலகளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படி இருக்கையில் தனது முகத்தில் தழும்பு போன்ற ஒரு வடிவில் டாட்டூ போட்டுக்கொள்வதற்காக பெண் ஒருவர் 1400 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்துள்ள சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்திருக்கிறது.
பிரிஸ்பேனைச் சேர்ந்த டெய்சி லவ்சிக் என்ற டாட்டூ கலைஞர் ஒருவர் Freckle என்ற புதுமையான டாட்டூவிற்காக மிகவும் பிரபலமடைந்திருக்கிறார்.
அதாவது பொதுவாக பலருக்கும் சாதாரணமாக முகத்தில் தோன்றும் தழும்பை டாட்டூவாக போட்டுவிடுவதுதான் டெய்சியின் வேலையாக இருக்கிறது. அது தொடர்பான டிக்டாக் வீடியோ பலவும் வைரலானதை அடுத்து 1400 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மைக்கேலா என்ற பெண் பிரிஸ்பேனிற்கு பயணித்து வந்திருக்கிறார்.
முகப்பருவால் வரும் ஆக்னே தழும்புகளை பெரும்பாலும் பெண்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால் மைக்கேலா தனக்கு அதுப்போன்ற தழும்புகள் இல்லை என்பதால் அதனை செயற்கையான முறையில் ஏற்படுத்திக் கொள்வதற்காக டாட்டூவாக போட்டுக்கொள்ளத் துணிந்திருக்கிறார்.
எதிர்பார்த்ததை போலவே டெய்சி மைக்கேலாவின் முகத்தில் மினி-ஹார்ட் ஷேப்பில் வரைந்துள்ள டாட்டூ அப்பெண்ணுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தாலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டபோது அவருக்கு ஏதோ குரங்கம்மை காய்ச்சல் வந்திருப்பதை போன்று உள்ளதாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
டெய்சியின் அந்த டிக்டாக் வீடியோவில் டாட்டூ போட்டதற்கு முன்பு இருந்த மைக்காலாவின் போட்டோவையும் இணைத்திருந்தார். அதனைக் கண்ட நெட்டிசன்கள், இயற்கையாக இருந்த முகமே நன்றாகத்தான் இருந்திருக்கிறது, தேவையில்லாமல் ஃபேண்டசியாக இருப்பதாக நினைத்து முகத்தில் வித்தியாசமாக டாட்டூ போட்டிருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.