டிரெண்டிங்

‘கருணாநிதி சொன்ன பட்டுப்புடவை உதாரணம்’-வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு டி.ஆர்.பாலு சொன்ன கதை!

‘கருணாநிதி சொன்ன பட்டுப்புடவை உதாரணம்’-வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு டி.ஆர்.பாலு சொன்ன கதை!

kaleelrahman

திமுக தலைவர் கருணாநிதி தன்னை பட்டு புடவை போல் கருதினார் என கதை சொல்லி நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் 11வது மண்டலத்திற்கு உட்பட்ட 150 மற்றும் 153 வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்.பாலு போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கதை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சிறையில் நானும் திமுக தலைவர் கருணாநிதியும் ஒன்றாக இருந்து விட்டு வெளியே வந்தபோது சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து விட்டதால் அதிருப்தியில் இருந்தேன். அப்போது வேட்பாளர்கள் கூட்டத்தில் பேசிய கருணாநிதி, டிஆர்.பாலு சீட்டு கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் இருப்பார்.

பெண்கள் எல்லோரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு புடவை கட்டிக் கொண்டு செல்வார்கள். டி.ஆர். பாலு பீரோவில் மடித்து வைக்கப்பட்ட பட்டுப்புடவை போன்றவர். அவரை எப்போது தேவையோ அப்போது பயன்படுத்துவேன் என கலைஞர் கூறினார். அதுபோன்று வாய்ப்பு கிடைக்காதவர்கள் திமுகவில் பல்வேறு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. தலைவர்கள் நின்று வென்ற சின்னம் அந்த உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டு கொண்டார்.