நடிகர் கமல் அரசியலுக்கு வருவது உறுதியானதை தொடர்ந்து, கெளதமியும் அரசியல் குறித்த தம் சொந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
நாமக்கலில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த கவுதமி, இந்த தலைமுறையில் அரசியலுக்கு யார் வந்தால் சரியாக இருக்குமோ, அவருக்குத்தான் ஆதரவு தர வேண்டும் என்று கூறினார். மேலும் அரசியலுக்கு யார் வரவேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த கமல் மற்றும் கௌதமி, சமீபத்தில் சில பல காரணங்களால் பிரிந்து விட்டனர். இதனை தொடர்ந்து, நடிகை கௌதமி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனியாக ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில் கமலும் அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளதை தொடர்ந்து நடிகை கவுதமியும், அரசியல் குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்து வருகிறார்.