டிரெண்டிங்

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு!

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு!

JustinDurai

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு முழுவதும் பெய்து வந்த மழையினால் குற்றாலத்தில் தற்போது கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் ஆக்ரோஷமாக விழுகிறது.

ஐந்து கிளைகளாக தண்ணீர் பிரிந்து விழும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒரே பிரிவாக இணைந்து கொட்டி விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் சீறிபாய்ந்து ஓடுகிறது.

கொரோனாவால் சுற்றுலா சேவைகளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் செல்லவும் அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.