டிரெண்டிங்

திருவள்ளூரில் முதன்முறையாக அரசு அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு

திருவள்ளூரில் முதன்முறையாக அரசு அதிகாரி கொரோனாவால் உயிரிழப்பு

webteam

திருவள்ளூரில் முதன்முறையாக கொரோனாவுக்கு அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு 100ஆக உயர்ந்துள்ளது. இன்று வெளியான தகவலின்படி, அங்கு புதிதாக 175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சென்னை அண்ணாநகரை சேர்ந்த சாமிநாதன் (50) என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 21-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இவரது உடல்நிலை மோசமடைந்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஓமந்தூரார் அரசினர் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று சாமிநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூரில் அரசு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.