நடிகை பாயல் கோஷின் பாலியல் குற்றச்சாட்டையடுத்து இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நேற்றிரவு எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு நடிகை பாயல் கோஷ் அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். அதன்பிறகு, கடந்தவாரம் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் ’அனுராக் காஷ்யப் என்னிடம் தவறாக நடந்துகொண்டார். அப்போது அவரிடமிருந்து தப்பித்து வந்துவிட்டேன். அதன்பிறகு பலமுறை என்னை அவரது வீட்டிற்கு வரச்சொல்லி மெசேஜ் அனுப்பினார். ஆனால், அதற்கான ஆதரங்கள் என்னிடம் இல்லை’ என்று தெரிவித்தார்.
பாயல் கோஷின் இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும்விதமாக அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவாக, அவரது முன்னாள் மனைவி, நடிகை டாப்ஸி, ஹீமா குரோஷி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டிருந்தனர். ஆனால், அவருக்கு எதிர்ப்பாக கைது செய்யவேண்டும் என்று கங்கனா ரனாவத் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், அனுராக் காஷ்யப் மீது மும்பை வெர்சோவா காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 376 பாலியல் வன்புணர்வு, 354 பெண்ணை சீற்றப்படுத்தும் தாக்குதல், 341 தவறான கட்டுப்பாடு, 342 தவறான சிறைவாசம் ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளதால், அனுராக் காஷ்யப் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்றிருக்கிறார்கள்.
இதையும் படிக்கலாமே...”ஹிதேந்திரன்…இதயத்தைவிட்டு நீங்காத; நீக்கமுடியாத பெயர்: இன்று ஹிதேந்திரன் நினைவு தினம்