டிரெண்டிங்

கட்சி தொடங்குவது எப்போது? - மாவட்ட செயலாளர்களுடன் ஒருமணிநேரம் ஆலோசித்த ரஜினி..!

கட்சி தொடங்குவது எப்போது? - மாவட்ட செயலாளர்களுடன் ஒருமணிநேரம் ஆலோசித்த ரஜினி..!

webteam

சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி தொடங்குவது எப்போது என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. மற்றக்கட்சியினர் மக்கள் மன்றத்தில் இணைந்தால் ஒன்றிணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை வெளியிட மாநாடு நடத்தலாமா அல்லது சாதாரணமாக வெளியிடலாமா என்பது குறித்தும் தனித்தனியே ரஜினி கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. பூத் கமிட்டி குறித்த செயல்பாடுகள் குறித்தும் ரஜினி மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டறிந்துள்ளார்.

மேலும் மன்ற செய்திகளை தலைமை அறிவுறுத்தலின்றி வெளியே சொல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கட்சி தொடங்குவதற்கான பணிகள் குறித்து பேசியதாகவும் ஆலோசனை முடித்து வெளியே வந்த நிர்வாகிகள் தெரிவித்தனர். அரசியல் நிலவரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொண்டதாகவும் நல்லது செய்ய வேண்டும் என்பதே அவரின் ஒரே குறிக்கோள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.