whatsapp scheduled message  whatsapp
டிரெண்டிங்

12 மணிக்கு சரியா வாழ்த்து சொல்லணுமா? WhatsApp-ல் சூப்பர் அப்டேட்!

இரவு 12 மணி பிறந்தநாள் வாழ்த்து முதல் முக்கிய தகவல் வரை - இனி WhatsApp-ல் மெசேஜை முன்கூட்டியே Schedule செய்யலாம்!

PT WEB
WhatsApp

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

நாம் மிகவும் எதிர்பார்த்த ஒரு சிறப்பான அப்டேட்டை வாட்ஸ்அப் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இரவு 12 மணிக்குப் பிறந்தநாள் வாழ்த்து அனுப்ப வேண்டும் என்றாலும் சரி, குறிப்பிட்ட நேரத்தில் ஒரு தகவலை அனுப்ப வேண்டும் என்றாலும் சரி, முன்கூட்டியே திட்டமிட்டு, சரியான நேரத்தில் தானாகவே மெசேஜ் செல்லும் வகையில் புதிய வசதி அறிமுகமாகவுள்ளது.

வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் அடிக்கடி புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம். ஆனால், அவற்றில் சில அப்டேட்கள் பயனர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருக்கும். அத்தகைய ஒரு முக்கியமான அப்டேட்டைதான் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் தற்போது கொண்டுவரவுள்ளது. இன்று வாட்ஸ்அப் இல்லையென்றால் நம்முடைய பல வேலைகளும், தகவல் தொடர்பும் முடங்கிப்போகும் அளவிற்கு இந்தச் செயலி நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

SCHEDULING MESSAGE

ஒரு தகவலை உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கோ, அல்லது பின்னர் நினைவுபடுத்திக் கொண்டு அனுப்ப வேண்டிய நிலைக்கோ மாற்றாக, நம்முடைய மெசேஜ் எப்போது மற்றொருவரைச் சென்றடைய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கும் வசதியை வாட்ஸ்அப் தற்போது வழங்குகிறது. அதுதான் பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த Scheduled Messages அப்டேட். அதாவது, ஒரு மெசேஜை முன்கூட்டியே தயாரித்து, குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பும் வகையில் திட்டமிட்டு வைத்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் டெக்ஸ்ட் மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தயாரித்து, நமக்கு விருப்பமான தேதி மற்றும் நேரத்தில் அனுப்ப முடியும். இந்த வசதி தனிநபர் சாட் மற்றும் குழு சாட் என இரண்டிலும் கிடைக்கவுள்ளதால், பிறந்தநாள் வாழ்த்துகளைச் சரியான நேரத்தில் அனுப்புவது, முக்கியமான தகவல்களைப் பகிர்வது போன்றவற்றை மிகவும் எளிதாக்கும்.

youtube

ஒரு செயலியில் அதிகம் கோரப்பட்ட அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். நமக்குத் தோன்றும் நேரத்திலோ அல்லது ஓய்வாக இருக்கும் நேரத்திலோ மெசேஜை எழுதி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் சென்றடையும் வகையில் திட்டமிட்டுக்கொள்ளலாம். குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரை முன்கூட்டியே மெசேஜ்களை ஷெட்யூல் செய்ய முடியும்.

இந்த வசதியைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிமையானதுதான். முதலில் வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்தச் சாட்டிற்குச் செல்ல வேண்டும். பின்னர் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்துவிட்டு, Send பட்டனை அழுத்திப் பிடித்து, மெசேஜ் அனுப்பப்பட வேண்டிய தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து உறுதிப்படுத்தினால் போதும்.

SCHEDULE MESSAGE UPDATE IN WA

இந்த மெசேஜைப் பெறுபவர்களுக்கு, இது முன்கூட்டியே திட்டமிட்டு அனுப்பப்பட்ட மெசேஜ் என்பது தெரியாது. அதேபோல், நாம் ஷெட்யூல் செய்த அனைத்து மெசேஜ்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் வசதியும் உள்ளது. ஒருவேளை அனுப்புவதற்கு முன்னதாக உங்கள் முடிவை மாற்றிக்கொண்டால், மெசேஜ் சென்றடைவதற்கு முன்பே அதை நீக்கிக்கொள்ளவும் முடியும்.

முக்கியமாக, உங்கள் போன் அணைக்கப்பட்டிருந்தாலோ அல்லது பேட்டரி தீர்ந்துபோயிருந்தாலோ கூட, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் அந்த மெசேஜ் தானாகவே சென்றடைந்துவிடும். இந்த ஷெட்யூல்ட் மெசேஜ்கள் End-to-End Encryption தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாக்கப்படுவதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதாவது, அனுப்புபவர் மற்றும் பெறுபவரைத் தவிர வாட்ஸ்அப் நிறுவனத்தால்கூட இந்த மெசேஜ்களைப் படிக்க முடியாது.

WHATSAPP NEW UPDATE

இதற்கு முன்பே Telegram மற்றும் Signal போன்ற மெசேஜிங் தளங்களில் இந்த வசதி இருந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப்பிலும் அறிமுகமாகியுள்ளது.

வாட்ஸ்அப்பின் இந்தப் புதிய Schedule Messages வசதி தற்போது உலகம் முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த சில வாரங்களுக்குள் அனைத்து பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.