கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த கார் விபத்தில் பெண் மருத்துவர் உயிரிழப்பு இருவர் படுகாயம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே ஓதியூர் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த சாலை விபத்தில் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ரேகா (29) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றிய செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவர் ரேகா தனது நண்பர்களுடன் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்தில் மோதியது. இதில் கார் சுக்குநூறாக உடைந்தது. இதில் மருத்துவர் ரேகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓட்டுநர் உட்பட மற்ற மூவரும் பலத்த காயமடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த இருவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.