டிரெண்டிங்

“தோல்வி என்ற பயம்தான் எனது ஆட்டத்தில் நான் அதீத கவனம் செலுத்த காரணம்!” - டிவில்லியர்ஸ்

EllusamyKarthik

“தோல்வி என்ற பயம்தான் எனது ஆட்டத்தில் நான் அதீத கவனம் செலுத்த காரணம்” என தெரிவித்துள்ளார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரரும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஏபி டிவில்லியர்ஸ்.

மும்பை இன்டியன்ஸ் அணிக்கு எதிராக அந்த அணி வெற்றி பெற மிகமுக்கிய காரணமாக அமைந்தது டிவில்லியர்ஸின் அரை சதம். இந்நிலையில் ஆர்சிபி அணியின் ட்விட்டர் பக்கத்தில் இதனை அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து எப்படி ஒவ்வொரு ஆண்டும் இதனை செய்ய முடிகிறது என்ற கேள்விக்கு தான் டிவில்லியர்ஸ் இந்த பதிலை தெரிவித்துள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் தொழில் முறை சார்ந்த கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அது அனுபவித்து விளையாடும் அளவுக்கு இல்லை என சொல்லலாம். சூழ்நிலைக்கு தகுந்த படி விளையாட நான் முயற்சிப்பேன். இதை கேட்பதற்கு சுலபமாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு முறையில் களத்தின் சூழல் மாறுபட்டுக் கொண்டே இருக்கும். அதனால் அந்த சூழலுக்கு உகந்த வகையில் என்னை தகவமைத்துக் கொள்வேன். 

ஆனால் எதார்த்தம் என்னவென்றால் தோல்விகளில் இருந்து நாம் தப்பிக்க முடியாது என்பது தான். 

அந்த தோல்வி என்ற பயம்தான் எனது ஆட்டத்தில் நான் அதீத கவனம் செலுத்த காரணம். நான் கவனத்துடன் பந்தை அணுகுவேன். முதல் 20 பந்துகளில் நாம் எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது தான் மிகமுக்கியம். கடந்த சீசனில் இருந்து எனது பார்மை கேரி செய்வது அவ்வளவு சுலபம் அல்லா. அதற்காக 2 - 3 மாதங்களுக்கு மேல் பயிற்சி எல்லாம் செய்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.