கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் 5 சவரன் வரை விவசாயிகள் பெற்ற கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் அறிவித்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார். அதில் விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிறிய விவசாயிகளின் 5 சவரன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நகைக்கடன் தள்ளுபடி குறித்த உறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.