டிரெண்டிங்

அமலாக்கத்துறை நடவடிக்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்

அமலாக்கத்துறை நடவடிக்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்

webteam

ஐஎன்எக்ஸ் நிறுவனம் மீது தொடரப்பட்டுள்ள சிபிஐ வழக்கு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு செய்ய ப.சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம் உதவியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே கார்த்திக் சிதம்பரத்தின் 90 லட்சம் உள்ள வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். 

அதில், நான் அமலாக்கத்துறையின் செய்தி அறிக்கையை படித்தேன். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சிறப்பு நீதிபதியால் ஏற்கெனவே ரத்து செய்யப்படுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு மத்திய நிதித்துறை அமைச்சகத்திடமிருந்து முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. அந்த அனுமதியும் வழக்கமான நடைமுறைபடியே வாங்கப்பட்டது. முகாந்திரமற்ற இந்த வழக்கை முறையாக சட்டப்படி மேற்கொள்வோம். நான் அஞ்சமாட்டேன். வழக்குக்கான ஆதாரங்களை முறையாக இணைக்கப்படும் போது அதற்கு ஏற்ப சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.