டிரெண்டிங்

நீட் தேர்வில் விலக்கு: தமிழக அரசின் இறுதி முயற்சி

நீட் தேர்வில் விலக்கு: தமிழக அரசின் இறுதி முயற்சி

webteam

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதிகட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
 
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நட்டாவின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். அப்போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் கோரிக்கை பற்றி சாதகமாக பரிசீலிப்பதாக அமைச்சர் நட்டா உறுதியளித்தார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.