நடிகர் கமல்ஹாசன் மக்களுக்கு புரியும்படி பேசினால் நன்றாக இருக்கும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய உயர் மதிப்புடைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இன்றைய தினம் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பங்கேற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் மக்களுக்கு புரியும்படி அவர் பேசினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.