டிரெண்டிங்

“தாளுக்கு ஆசைப்பட்டு தவறிழைக்காதீர்!” - தேர்தல் ஆணையத்தின் அசத்தல் விளம்பரங்கள்

“தாளுக்கு ஆசைப்பட்டு தவறிழைக்காதீர்!” - தேர்தல் ஆணையத்தின் அசத்தல் விளம்பரங்கள்

Veeramani

அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் பல அசத்தலான விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறது.

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி, தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது, இந்த தேர்தலில் அனைவரும் நேர்மையாக வாக்களிக்க வேண்டி தமிழக தேர்தல் ஆணையம் பல சிறப்பான விளம்பரங்களை வெளியிட்டிருக்கிறது.

இந்த விளம்பரங்களை முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் தமிழக தேர்தல் ஆணையம் தனது பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

இந்த விளம்பரங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.