டிரெண்டிங்

ஈபிஎஸ் தரப்பு இப்போதுதான் விழித்துள்ளது: கே.பி.முனுசாமி

ஈபிஎஸ் தரப்பு இப்போதுதான் விழித்துள்ளது: கே.பி.முனுசாமி

Rasus

ஈபிஎஸ் தரப்பு இப்போதுதான் விழித்திருப்பதாக ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, " ஜெயலலிதா மர்ம மரணத்திற்கு விசாரணை வேண்டும். சசிகலா, மற்றும் அவரது குடும்பம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். பின்னர் தான் அதிமுக அணிகள் இணைப்பு குறித்த பேச்சவார்த்தை நடைபெறும் என ஏற்கனவே நாங்கள் தெரிவித்துவிட்டோம். ஜெயலலிதாவால் 10 ஆண்டுகளுக்கு முன்பே டிடிவி தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் கட்சியிலே உறுப்பினராக இல்லை என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருக்கிறோம். அவர்கள்தான் டிடிவி தினரகனை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். தற்போதைய சூழலில் வெளியேற்றுவதாக கூறியுள்ளார்கள். இப்போதுதான் ஈபிஎஸ் தரப்பு விழித்திருப்பதாக கருதுகிறோம். இந்த விழிப்பு தினகரனோடு மட்டும் இல்லாமம் சசிகலா குடும்பம் முழுவதும் சேர்ந்து வெளியேற்றப்படும் செயல்பாடாக இருந்தால் நாங்கள் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறோம்" என்றார்.

ஓபிஎஸ்-க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதாக பரவிய செய்தி குறித்து கேள்வி கேட்டப்பட்டது. இதற்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, ஒரு கொள்கையோடு இருக்கும் தலைவரை இதுபோன்ற பதவிகளை கொடுத்து சரிசெய்துவிட முடியும் என யாரும் எண்ணிவிடக் கூடாது. தான் வைத்த போராட்டத்தில் வெற்றி பெற்ற பின்பு தான் எதையும் ஓபிஎஸ் பேசுவார் என கே.பி.முனுசாமி கூறினார்.