அதிமுக அணிகள் இணைப்பு இதுவரை நடக்காதசூழலில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் போராட்டம் அறிவித்துள்ளனர்.
டெங்கு பாதிப்பு, குடிநீர் தட்டுப்பாடு, நீட் தேர்வு குளறுபடி, விவசாயிகள் பிரச்னை மற்றும் மாநகராட்சி நிர்வாக சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து சென்னையில் வரும் 10 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஓபிஎஸ் அணியினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மெத்தனப் போக்கை கடைபிடிப்பதாக கண்டன வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.