டிரெண்டிங்

ஈபிஎஸ் தீர்மானம் தினகரனை கட்டுப்படுத்தாது: தங்க தமிழ்ச்செல்வன்

ஈபிஎஸ் தீர்மானம் தினகரனை கட்டுப்படுத்தாது: தங்க தமிழ்ச்செல்வன்

webteam

எடப்பாடியின் தீர்மானம் கட்சியையோ, தினகரனின் அதிகாரத்தையோ கட்டுப்படுத்தாது என தினகரன் ஆதரவு எம்எல்ஏ, தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

அதிமுகவின் பொதுச் செயலாளர்‌ பதவியை ஜெயலலிதா தவிர வேறு ஒருவர் அலங்கரிப்பதை தொண்டர்கள் ஒரு போதும் விரும்பமாட்டார்கள் எ‌ன முதலமைச்சர்‌ எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இந்த தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன், முக்கிய நிர்வாகிகளை விடுத்து 75 பேரை கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் கட்சியையோ, தினகரனின் அதிகாரத்தையோ கட்டுப்படுத்தாது என கூறியுள்ளார். 

சசிகலாவால் பதவி பெற்ற அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் பதவி விலக வேண்டும் என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.