அரசு விழாக்களில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசுவதை முதல்வரும், துணை முதல்வரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு எவ்வித முன்னேற்பாடுகளையும் செய்யவில்லை என்றும் துரைமுருகன் குற்றம்சாட்டினார். மேலும் நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்வதில், முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தோல்வி கண்டுள்ளனர் என்று துரைமுருகன் விமர்சித்துள்ளார். அதேபோல் மேடை நாகரீகம் கூட தெரியாமல் முதல்வரும், துணை முதல்வரும் அரசு விழாக்களில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பற்றி அவதூராக பேசுவது கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்று வரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களை வைத்து முதல்வர் பழனிசாமியின் அணியினர், ஸ்டாலின் குறித்தும் திமுக குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.