நீலகிரி மாவட்டத்தில் மலைப்பாதையை கடக்க முடியாமல் தவித்த குட்டி யானைக்கு தாய் யானை உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கூடலூரில் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் இந்த காட்சியை வீடியோ பதிவு செய்துள்ளனர். பிறந்த சில நாட்களே ஆன அந்த குட்டி சாலையின் தடுப்பை தாண்ட முடியாமல் தவித்தது. அப்போது மேலே சென்ற தாய் யானை மீண்டும் கீழே வந்து குட்டியை தூக்கிவிட்டுவிட்டு மேலே சென்றது.
இச்சம்பவம் நேற்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் பார்ப்பவர்களின் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.