டிரெண்டிங்

அதிக வருமானம் பெறும் கட்சி திமுக: ஆய்வு வெளியீடு

அதிக வருமானம் பெறும் கட்சி திமுக: ஆய்வு வெளியீடு

webteam

மாநில கட்சிகளில் அதிக நிதி பெறும் கட்சிப் பட்டியலில் திமுக முதலிடத்தை பிடித்துள்ளது. பெரிய கட்சியான அதிமுக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஜனநாயக உரிமைகள் என்ற அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள குறிப்புகளில் 2015-16ம் ஆண்டு அதிக நிதி பெற்ற மாநில கட்சிகளில் ரூ.77.63 கோடி பெற்று திமுக முதலிடத்தை பிடித்துள்ளது. ரூ.54.93 கோடி பெற்று அதிமுக 2வது இடத்திலும் உள்ளது. மக்களிடம் வசூலித்த பணத்தில் தி.மு.க 6.9 கோடி செலவிட்டு உள்ளது. அதிமுக 7 கோடியும், பாட்டாளி மக்கள் கட்சி 6.8 கோடியும் செலவிட்டு உள்ளது.