டிரெண்டிங்

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த அறையில் சோதனை

தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த அறையில் சோதனை

Rasus

மதுரையில் அமமுகவை சேர்ந்த தங்கத் தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த அறையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோசனை நடத்தினர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் தங்கியிருந்தார். அங்கு வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம், பரிசுப் பொருட்கள் வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து விடுதிக்கு சென்ற அதிகாரிகள், தங்க தமிழ்ச்செல்வன் அங்கு இல்லாததால் மாற்றுச் சாவி வாங்கி அறையை சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில் அறையில் இருந்து பணம், ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.