டிரெண்டிங்

தஞ்சை: கேட்பாரற்று நின்ற கண்டெய்னர் லாரி; தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை

தஞ்சை: கேட்பாரற்று நின்ற கண்டெய்னர் லாரி; தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை

JustinDurai

தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ராஜஸ்தான் மாநில பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர், கண்டெய்னர் லாரியை திறந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.லாரியில் உள்ள சாக்குப் பைகளில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து ஓட்டுநரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரிக்கையில், பள்ளி மாணவர்களுக்கான பொருட்கள் சாக்குப் பைகளில் உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து கண்டெய்னர் பெட்டியில் உள்ள ஒவ்வொரு பைகளையும் திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.