டிரெண்டிங்

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா ?

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா ?

jagadeesh

வாக்காளர் பட்டி‌யலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க நவம்பர் 18-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து‌, வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள நவம்பர் 18-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்‌ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார். மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.