டிரெண்டிங்

 “8 பேரின் ராஜினாமா சட்டப்படி இல்லை” - கர்நாடக சபாநாயகர் கடிதம்

webteam

கர்நாடகா எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக சட்டப் பேரவை சபாநாயகர் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தக் கட்சிகளைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், அதை ஏற்பது குறித்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று பரிசீலிப்பார் எனத் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்நிலையில் கர்நாடகா சட்டப் பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “13 எம்.எல்.ஏக்களில் யாரும் என்னை பார்க்கவில்லை. ஜனநாயக கடமையை நான் சரியாக ஆற்றுவேன். மேலும் 13 பேரின் ராஜினாமாவில் 8 பேரின் ராஜினாமா கடிதம் சட்டப்படி இல்லை. எனவே அவர்கள் என்னை வந்து சந்திக்க அவர்களுக்கு நேரம் தந்துள்ளேன்” என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

முன்னதாக ராஜினாமா செய்த காங். எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சித்தராமய்யா, சபாநாயகரை சந்தித்து கடிதம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.