டிரெண்டிங்

"எதிரிகளை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

"எதிரிகளை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

webteam

நாடாளுமன்ற தேர்தல் மூலம் எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும், அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும் எனவும் அதிமுக தொண்டர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, மாவட்டச் செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் பேசிய முதலமைச்சர் ‌அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றும், தற்போது பாஜக, பாமக, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்கும் நிலையில் மேலும் சில கட்சிகள் வந்து சேரும் என்றும் தெரிவித்தார். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நம் கூட்டணியைச் சார்ந்தவர்களை வெற்றிபெறச் செய்தால்தான், நம் தேவைகளை நாம் பூர்த்திசெய்ய முடியும் எனவும் வலியுறுத்தினார்.

இந்த கூட்டணியை பலம் பொருந்திய கூட்டணி என தொண்டர்கள் நிரூபித்து காட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். வரும் தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல் எனவும் நம் தமிழகத்தை வளமான தமிழகமாக மாற்றிட முக்கியமான தேர்தல் எனவும் குறிப்பிட்டார்.

நம்முடைய எதிரிகளை நாம் ஓட ஓட விரட்டவேண்டிய தேர்தல் இது என்ற முதலமைச்சர், இந்தத் தேர்தலில் நம்முடைய கூட்டணிக் கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்து லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.