டிரெண்டிங்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: சந்திரபாபு நாயுடுவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: சந்திரபாபு நாயுடுவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்

webteam

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொசஸ்தலை ஆற்றுக்கான நீர்வரத்துப் பகுதியில் தடுப்பணை கட்டப்படுவது குறித்து புதிய தலைமுறையில் செய்தி ஒளிபரப்பான நிலையில், முதலமைச்சர் இந்த கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில், நெல்வாயல் என்ற பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் துணை நதியான குச ஆற்றில் தடுப்பணை கட்டப்படுவது தமிழக விவசாயிகளை கவலையடையச் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசிடம் முன்கூட்டியே கலந்தாலோசித்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, தன்னிச்சையாக முடிவெடுத்து தடுப்பணை கட்டுவது சரியான நடைமுறையல்ல என தெரிவித்துள்ளார். எனவே, கொசஸ்தலை ஆற்றின் நீர்வரத்துப் பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.