டிரெண்டிங்

டிச.6 முதல் ஆர்.கே.நகரில் முதல்வர் பரப்புரை

டிச.6 முதல் ஆர்.கே.நகரில் முதல்வர் பரப்புரை

webteam

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிச.6 முதல் பரப்புரை தொடங்குகிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை அடுத்து சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி காலியானது. அதனை அடுத்து 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. 
அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். தங்களது கட்சியின் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிச. 6 ஆம் தேதி தனது பரப்புரையை ஆரம்பிக்கிறார். அதனை அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மீது எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாததால் விரக்தியின் விளிம்பில் உள்ளார் ஸ்டாலின் என்று குறிப்பிட்டார்.