டிரெண்டிங்

ஆட்சியைக் கலைக்க எடப்பாடியே போதும்: டி.கே.எஸ். இளங்கோவன்

ஆட்சியைக் கலைக்க எடப்பாடியே போதும்: டி.கே.எஸ். இளங்கோவன்

webteam

ஆட்சியைக் கலைக்க முதலமைச்சர் எடப்பாடியே போதும் என்று திமுக எம்பி டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். 

ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகள் பணத்துக்காகவும், பதவிக்காக மட்டுமே. போயஸ் கார்டனில் தீபாவுக்கும் உரிமை இருப்பதால் அவர் போராடி வருகிறார். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி விட்டது. பிளாஸ்டிக் அரிசி தொடர்பான தகவல்களை பரப்புவதும் அரசுதான். மறுப்பதும் அரசுதான். எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் அமைய, மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். 
'அதிமுக அரசைக் கவிழ்க்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை என்பதால் அவர் விரக்தியில் பேசுகிறார்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், ’ஆட்சியைக் கலைக்க முதலமைச்சர் எடப்பாடியே போதும். வேறு யாரும் தேவையில்லை’ என்று கருத்து தெரிவித்தார்.