தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக, நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பரப்புரை செய்ய, 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள் ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பரப்புரை செய்து வருகிறார். அவர் பீகாரில் கடந்த 16 ஆம் தேதி, மத்திய முன்னாள் அமைச்சர் தரிக் அன்வரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, பிரதமர் மோடியை வீழ்த்த முஸ்லீம் வாக்காளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார். அப்போது மத ரீதியாக அவர் மேலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது புகார் கூறப்பட்டதை அடுத்து, தேர்தல் ஆணையம் அவர், 72 மணி நேரம் தேர்தல் பரப்புரை செய்ய தடை விதித்துள்ளது.
இன்று காலை 10 மணி முதல் முதல் 72 மணி நேரம் பொதுக்கூட்டங்கள், பேரணியில் பங்கேற்கவும் பேட்டி அளிக்கவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.