தங்களுக்கு சொந்தமான இடங்களிலிருந்து பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதை நிரூபிக்க முடியுமா என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.
துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய வீடு மற்றும் கல்லூரியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது, 10 லட்சம் ரூபாய் மட்டுமே எடுத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சூலூர் தேர்தல் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் தன்னுடைய வீட்டிலிருந்து 12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறுவது எப்படி என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதலமைச்சர் இப்படி கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய் எனவும் 13 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் இடம் தங்களுடையது இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தங்கம் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டதை நிரூபித்தால், பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள துரைமுருகன், இல்லையேல் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என சவால் விடுத்துள்ளார்.
மக்களே அவரை வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டதாகவும் துரைமுருகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.