டிரெண்டிங்

போதைப் பொருள் விற்ற பணத்தை பங்கு போட்டவர் விஜயபாஸ்கர்: துரைமுருகன் குற்றச்சாட்டு

போதைப் பொருள் விற்ற பணத்தை பங்கு போட்டவர் விஜயபாஸ்கர்: துரைமுருகன் குற்றச்சாட்டு

webteam


போதைப் பொருள் விற்ற பணத்தை பங்கு போட்டவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குற்றச்சாட்டினார். 

தமிழக சட்டசபையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  நீட் தேர்வு மசோதா குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகள் குறித்து துரைமுருகன் பேசினார். இதனை அவை குறிப்பில் இருந்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நீக்கினார். இதனை கண்டித்தும் அமைச்சர் விஜயபாஸ்கரின் உரையை புறக்கணித்தும் திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து சட்டசபை வளாகத்தில் பேசிய திமுக எதிர்க்கட்சித்துணைத் தலைவர் துரைமுருகன்,  சுகாதாரத்துறை அமைச்சர் குறித்து பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கியதால் வெளிநடப்பில் ஈடுபட்டோம். மக்கள் மீது அக்கறையற்றவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மக்களை பாதிக்கும் போதை பொருட்களை விற்ற பணத்தை பங்கு போட்டுக் கொண்டவர். இதைப் பற்றி சட்டசபையில் பேசினோம். ஆனால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டனர். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்தோம். நீட் தேர்வு மசோதாவை குடியரசுத்தலைவர் பார்வைக்கே அனுப்பவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.