டிரெண்டிங்

அழைத்தார் துரைமுருகன்.. வந்தார் டிஜிபி ராஜேந்திரன்...!

அழைத்தார் துரைமுருகன்.. வந்தார் டிஜிபி ராஜேந்திரன்...!

webteam

டிஜிபி வந்தால்தான் பேசுவேன் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேட்டுக் கொண்டதால் டிஜிபி ராஜேந்திரன் இன்று சட்டப்பேரவைக்கு வந்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்றும் நாளையும் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் துரைமுருகன், காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெற்று வருவதால் தமிழக டிஜிபி ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வந்தால்தான் பேசுவேன் என்று கூறினார். இதையடுத்து டிஜிபி ராஜேந்திரன் அவசர அவசரமாக பேரவைக்கு வரவழைக்கப்பட்டார். டிஜிபி-ஐ சட்டப்பேரவைக்கு திமுக உறுப்பினர் துரைமுருகன் அழைத்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

பணிச்சுமையை குறைக்க வேண்டும், ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை காவல்துறையைச் சேர்ந்தவர்கள் முன்வைத்திருப்பதாக கூறப்படுகிறது.