ஜி.எஸ்.டி.யால் விலைவாசி உயர்ந்து ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் எனவும், ஜி.எஸ்.டி. ஆதரவில் பிரதமர் மோடி இரட்டை வேடம் போடுவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தை அடுத்த கரசங்காலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலின், குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி.யை எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்ற பின் நிறைவேற்றியுள்ளதாக கூறினார். ஜி.எஸ்.டி.யை ஆதரித்து ஆளும் அரசு மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்தார். குட்கா விவகாரத்தில் தமிழக காவல்துறை தலைவராக உள்ள டி.கே. ராஜேந்திரன் 60 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை கூறியுள்ளதாகவும், விசாரணை வளையத்தில் அவர் உள்ளபோது, டிஜிபியாக தொடர காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.