கொரோனா பொதுமுடக்கத்தால் வருவாய் இழந்த வறியோருக்கு, புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' மூலம் நிவாரணம் கிடைத்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், தனியார் பள்ளி ஆசிரியர்கள் என 60 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் மதிப்பில் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன. துபாய் வாழ் தமிழரான அலெக்சாண்டர் ஜெரோம், துளிர்க்கும் நம்பிக்கை குழுவுடன் இணைந்து இந்த உதவிகளை வழங்கினார். தஞ்சாவூர் தூய அந்தோணியார் சாரணர் குழுவினரும், மனோஜிபட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி குழுவினரும் இணைந்து நிவாரணப் பொருள்களை வீடு தேடிச் சென்று வழங்கினர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கழிஞ்சூரில் மனவளர்ச்சி குன்றிய மற்றும் பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளி பிள்ளைகள் 2 பேருடன், பசியாற வழியின்றி தவித்த தாய் சுகந்தி 'துளிர்க்கும் நம்பிக்கை'யிடம் உதவி கோரியிருந்தார். அவர்களுக்கு வேலூர் மாநகர அதிமுக மாவட்டச் செயலாளர் S.R.K. அப்பு உதவ முன்வந்தார். தனது சொந்தச் செலவில், மூவாயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி, மளிகை பொருட்களை அவர் நேரில் வழங்கினார்.
- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளில், சிலவற்றுக்கு செய்யப்பட்ட உதவிகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.
கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.
உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'