டிரெண்டிங்

போதை மருந்து சாப்பிட்டால் விடிய விடிய நடனம் ஆடலாம்: கோவா முதல்வர்

போதை மருந்து சாப்பிட்டால் விடிய விடிய நடனம் ஆடலாம்: கோவா முதல்வர்

rajakannan

போதை மருந்து சாப்பிட்டால் இரவு முழுவதும் நடனமாட முடியும் என்றும், மது அருந்தினால் அவ்வாறு ஆட முடியாது என்றும் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.

2018-ம் ஆண்டினை போதைப்பொருள் எதிர்ப்பு, விபத்து எதிர்ப்பு ஆண்டாக அனுசரிக்க கோவா மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான விவாதம் கோவா சட்டசபையில் நடைபெற்றது. அப்போது, கோவாவில் உள்ள போதைப்பொருள் மாஃபியாக்கள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரதாப் சிங் ரானே தீர்மானம் கொண்டு வந்தார்.

போதைபொருள் விவகாரம் தொடர்பான விவாதத்தில் பேசிய மனோகர் பாரிக்கர், மது அருந்தினால் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தான் நடனமாட முடியும். ஆனால் போதை மருந்து சாப்பிட்டால் இரவு முழுவதும் நடனமாட முடியும் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், “சில இரவு நேர விடுதிகளில் போதைப்பொருள் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடங்களில் போதை மருந்து விற்பனை நடைபெறுவதை கோவா போலீசார் கண்டுபிடித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.