டிரெண்டிங்

இரட்டை இலை இடைத்தரகர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

இரட்டை இலை இடைத்தரகர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

webteam

இரட்டை‌ இலை சின்னத்திற்காக லஞ்சம் தர முயன்ற வழக்கில் இடைத்தரகரான சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நீண்ட விசாரணைக்குப் பிறகு தினகரன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதற்கிடையே சுகேஷ் சார்பில் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மூன்று முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ஒரு முறை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரின் 5வது ஜாமீன் மனுவை அக்டோபர் 16ஆம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.