சிலை கடத்தல் வழக்கு ஒரு தனிநபரின் விளம்பரத்துக்காக நடைபெற கூடாது, வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டு உள்ளது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 17 மாதங்கள் ஆட்சியின் சாதனைகளை கூறும் வகையில் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 2 ஆம் கட்டமாக 21 தொகுதிகளில் 15 நாட்கள் சைக்கிள் பிரச்சாரப் பயணம் இன்று முதல் நடைபெற உள்ளது, இதற்கான ஆலோசனை கூட்டம் மதுரை பாண்டிகோவில் அருகே நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிவருவாய்த்துறை அமைச்சர் ஆரி.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் "அதிமுகவின் எக்கு கோட்டையாக விளங்குகின்றது திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி , அந்த தொகுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை வருகின்றது, சிலை கடத்தல் வழக்கு ஒரு தனிநபரின் விளம்பரத்துக்காக நடைபெற கூடாது, வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டு உள்ளது, தமிழகத்தில் கிராமங்கள் தோறும் மருத்துவமனை உள்ளது, விளம்பரங்களை நம்பி வீடுகளில் பிரசவம் பார்க்க வேண்டாம், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததில் இந்திய அளவில் தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது, இது சரித்திர சாதனை, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் அறிவிப்புக்கு பிறகு தான் முடிவு எடுக்கப்படும்" என கூறினார்