மிரட்டல் அடிதடியில் நம்பிக்கை இல்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊழல் புகார்களை முன்வைக்கும் கமலை மிரட்டும் அளவுக்கு பெரிய ஆட்களா என நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் கேள்வி கேளுங்கள். ஊழல் புகார் குறித்து குற்றம்சாட்டக்கூடாது என கூற நீங்கள் யார் என்றும், ஆதாரம் இல்லை என்றால் இல்லை என கூறுங்கள் அதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுங்கள் அதைவிடுத்து பேசவே கூடாது என மிரட்டுவதை நிறுத்துங்கள் என்றும் பிரகாஷ்ராஜ் பேசியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மிரட்டல், அடிதடி போன்றவற்றில் தனக்கு நம்பிக்கையில்லை எனக் கூறியுள்ளார்.