டிரெண்டிங்

தியாகியின் தாய் என்பதால் கட்டணம் இல்லாமல் சிகிச்சை: நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்த மருத்துவர்

Veeramani

அவுரங்காபாத்தில் ராணுவத்தில் நாட்டிற்காக உயிரிழந்த தியாகியின் வயது முதிர்ந்த தாய்க்கு சிகிச்சையளித்த மருத்துவர் அவரிடம் கட்டணம் வேண்டாம் என்று சொல்லி, அவரை அன்புடன் கட்டியணைத்த வீடியோவை மகாராஷ்டிர அமைச்சர் அசோக் சவான் பகிர்ந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் அவுரங்கபாத்தை சேர்ந்த மருத்துவர் அல்டஃப், தியாகி ஒருவரின் வயது முதிர்ந்த தாய்க்கு சிகிச்சை அளித்தபிறகு அவரிடம் கட்டணம் வேண்டாம் என்று சொல்லியுள்ளார். மேலும் அந்த முதிர்ந்த தாயை அன்புடன் மருத்துவர் கட்டியணைத்து ஆறுதல் கூறுவதுபோல அந்த வீடியோ உள்ளது.

இந்த வீடியோவை பகிர்ந்த அவர், அதில் “அவுரங்காபாத்தைச் சேர்ந்த டாக்டர் அல்தாஃப் ஒரு வயதான பெண்மணிக்கு சிகிச்சை அளித்து வந்தார், அந்த பெண்மணி ஒரு தியாகியின் தாய் என்பதை அவர் புரிந்து கொண்ட பின் அவரின் சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்ததுடன், இதுபோல அன்புடன் நடந்துகொண்டார். நம் நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ஹீரோக்களுக்கு அவர் காட்டும் அன்பிற்காக அவரை போனில் அழைத்து நன்றி கூறினேன்” என பதிவிட்டுள்ளார்.