சாதி மத பேதங்களுக்கு இடம் அளிக்க கூடாது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளின் பயிற்சி மையங்கள் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய துணை முதல்வர், மாணவர்கள் சாதி மத பேதங்களுக்கு துளி அளவும் இடம் அளிக்காமல், சமதர்ம சமுதாய சிந்தனையை தங்களின் மனிதில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் மாணவர்கள் புதியதோர் பாரதத்தை படைக்க மனதில் உறுதி கொள்ள வேண்டும் எனவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.